World Badminton Championship Women division pv sindhu advanced

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது சுற்றில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின்னை எதிர்கொண்டார்.

இதில், 21-16, 21-14 என்ற செட் கணக்கில் கிம் ஹியோ மின்னை தோற்கடித்து வெற்றிப் பெற்றார் சிந்து.

சிந்து தனது அடுத்த சுற்றில், ரஷியாவின் எவ்ஜினியா கொஸட்ஸ்கயா அல்லது ஹாங்காங்கின் செங் கான் யீயை சந்திக்கவுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் வெய் நானுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் சாய் பிரணீத் 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவர் தனது 2-வது சுற்றில், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவை சந்திக்கவுள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தனது முதல் சுற்றில், இந்தியாவின் பிரஜக்தா சாவந்த் - மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன் இணையுடன் மோதியதில் 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸை எதிர்கொண்ட, ஃபின்லாந்தின் ஆய்ரிமிக்கெல்லா காயம் காரணமாக விலகியதை அடுத்து ரிதுபர்னா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.