ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியைத் தோற்கடித்தது,

இதன் மூலம் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள் குவித்தது.

திருஷ் காமினி 146 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்கள் குவித்தார்.

தீப்தி சர்மா 128 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் குவித்தார்.

அயர்லாந்து தரப்பில் ஜாய்ஸ், கேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 49.1 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 33, ஜாய்ஸ் 31 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

திருஷ் காமினி ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.