Asianet News TamilAsianet News Tamil

மகளிர் ஹாக்கி: 3-வது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது தென் கொரியா...

Women hockey South Korea defeated India in the 3rd match
Women hockey South Korea defeated India in the 3rd match
Author
First Published Mar 9, 2018, 10:52 AM IST


ஐந்து ஆட்டங்கள் கொண்ட மகளிர் ஹாக்கியில் 3-வது ஆட்டத்தில் இந்தியாவை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா முதல் வெற்றியை பெற்றது. 

மகளிர் ஹாக்கி சியோல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி கோலடிக்க, தென் கொரியாவுக்கான கோல்களை சியுல் கி சியோன், யுரிம் லீ ஆகியோர் அடித்தனர்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. எனினும், முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்ட தென் கொரியா, இந்திய கோல் போஸ்டை நோக்கி முன்னேறத் தொடங்கியது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, சியுல் கி சியோன் தவறின்றி கோலாக்கினார். அதிலிருந்து இந்தியா மீளும் முன்பாகவே அடுத்த 2 நிமிடங்களில் தென் கொரியா 2-வது கோலை எட்டியது. 

14-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை அந்த அணியின் யுரிம் லீ கோலாக மாற்ற, தென் கொரியா 2-0 என முன்னிலை பெற்றது.

சற்று மீண்ட இந்தியாவுக்கு, 16-வது நிமிடத்தில் முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி ஃபீல்டு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவின் கோல் வாய்ப்புகளை திறம்படத் தடுத்த இந்தியா, தனக்கான 2-வது கோல் வாய்ப்புக்காக போராடியது.

அணியின் 2 கோல் முயற்சிகளை தென் கொரிய கோல் கீப்பர் ஹீபின் ஜங் அரண்போல்  தடுத்தார். இதேபோல், தென் கொரியாவுக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் ரஜனி எடிமர்பு அருமையாகத் தடுத்தார். 

இறுதியில் இரண்டு அணிகளுக்குமே கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால், தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தியா - தென் கொரியா இடையேயான 4-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios