Winter Olympic Tournament - Participants on behalf of India

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லூக் வீரர் ஷிவா கேசவன், ஸ்கீ வீரர் ஜெகதீஷ் சிங் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் லூக் வீரர் ஷிவா கேசவன், ஸ்கீ வீரர் ஜெகதீஷ் சிங் ஆகியோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் ஷிவா கேசவன் 6-வது முறையாகவும், ஜெகதீஷ் சிங் முதல் முறையாகவும் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிடுகின்றனர்.

ஷிவா கேசவன் முதல் முறையாக 1998-ல் ஜப்பானில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 2002, 2006, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

இதில் 1998, 2002 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் ஷிவா மட்டுமே பங்கேற்ற நிலையில், இதர ஒலிம்பிக்கில் ஷிவாவுடன் மொத்தமாக 6 இந்தியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.