Win the Asian competition and the players who qualify for world competition 2 medals for India

ஆசிய கிராண்ட்ப்ரீ பாரா தடகளப் போட்டியில் இந்தியா வீரர்கள் பதக்கம் வென்று பாரா உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றனர். தங்கம், வெண்கலம் என இந்தியா இரு பதக்கங்களை வென்றது.

ஆசிய கிராண்ட்ப்ரீ பாரா தடகளப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ராமுத்ரி சோமேஷ்வர ராவ் மற்றும், ஹோகாட்டோவும் பங்கேற்றனர்.

இதில், ராமுத்ரி தங்கமும், ஹோகாட்டோ வெண்கலமும் வென்று அசத்தினர்.

இந்த வெற்றியின்மூலம் இவர்கள் இருவரும் பாரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.