பிரமாண்டமாக தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ்: பரிசுத் தொகை மட்டும் ரூ.464 கோடி!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் நோவக் ஜோகோவிக், பெட்ரோ காச்சினுடன் மோதுகிறார்.
ஆண்டுதோறும் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என்று 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தொடர் வரும் 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்காக நட்சத்திர வீரர்கள் பலரும் லண்டனில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!
இந்த தொடரில் காயம் காரணமாக ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் விலகியுள்ளார். பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் தொடர்களில் வெற்றி பெற்ற நோவக் ஜோகோவிச் இந்த தொடரிலும் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், வெற்றி பெற்றால் அதிக முறை விம்பிள்டன் டிராபியை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்வார்.
IND vs AFG ICC உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட்டு முன்பதிவு செய்வது எப்படி?
விம்பிள்டன் தொடருக்கான பரிசுத் தொகை ரூ.464 கோடி. ஒற்றையர் பிரிவில் முதல் இடம் பிடிப்போருக்கு தலா ரூ.24.5 கோடியும், 2ஆவது இடம் பிடிப்போருக்கு ரூ.12.25 கோடியும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரட்டையர் பிரிவ்ல் முதல் இடம் பிடிப்போருக்கு ரூ.6.25 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் சுற்றில் தோல்வி அடையும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.57 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இதில் இன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டி நடக்கிறது. நாளையும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டி நடக்கிறது. 5ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2ஆவது சுற்றுப் போட்டி நடக்கிறது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்று நடக்கிறது.
இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!
இன்றைய போட்டியில் ஜோகோவிச், ஸ்வியாடெக், வீனஸ் வில்லியம்ஸ், கேஸ்பர் ரூட், பெட்ரோ காச்சின் ஆகியோர் களம் காணுகின்றனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது,