Will India ever play in the World Cup? So bad ...

துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியை இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று 12-வது இடத்துடன் நிறைவு செய்தது.

துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியாவின் சாங்வோன் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் மூவருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறினர். 

இதில், ஷீராஸ் ஷேக் 23-ஆம் இடம் பிடிக்க, ஸ்மித் சிங் 37 மற்றும் அங்கத் பாஜ்வா 43-வது இடங்களைப் பிடித்தனர்.

இந்தப் பிரிவில் அமெரிக்காவின் வின்சென்ட் ஹேன்காக் தங்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவர் 59 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார்.

இந்தப் போட்டியில், ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ஷாஸார் ரிஸ்வி வென்ற வெள்ளி மட்டுமே, இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம். 

இந்தப் போட்டியில் பங்கேற்ற 70 நாடுகளில் 24 நாடுகள் பதக்கம் வென்றன. சீனா 4 தங்கத்துடன் முதலிடம் பிடித்தது. ரஷியா 3, அமெரிக்கா 2 தங்கங்களுடன் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.