Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்தை வெற்றிக் கொள்ளுமா இந்தியா?

will india-defeat-england
Author
First Published Dec 8, 2016, 12:41 PM IST


இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்குகிறது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கும்.

முந்தைய வெற்றிகளின் காரணமாக கோலி தலைமையிலான இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடனே இந்தப் போட்டியை எதிர்கொள்ளும். கடந்த 2011, 2012, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பெற்றது இங்கிலாந்து. எனவே, இந்தத் தொடரை கைப்பற்றுவதன் மூலம் இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்க முனையும்.

இந்திய அணி வீரர்களைப் பொருத்த வரையில், கடந்த போட்டியில் சற்று தடுமாறிய புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் இந்த ஆட்டத்தில் மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலத்துக்குப் பிறகு களமிறங்கி தொடக்க வீரராக அசத்திய பார்த்திவ் படேல், இந்த ஆட்டத்திலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டரில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

3-ஆவது டெஸ்டில் இந்திய அணியின் ஸ்கோர் முன்னேற்றத்துக்கு உதவிய கடைசி ஆர்டர் பேட்ஸ்மேன்களான அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் ஆகியோர் இந்த ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பு வழங்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது வேகத்தாலும், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் ஆகியோர் தங்களது சுழற்பந்துவீச்சாளும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணரடிக்க உள்ளனர்.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், 3-ஆவது டெஸ்டில் காயமடைந்த ஹசீப் ஹமீது, ஸஃபர் அன்சாரி ஆகியோருக்குப் பதிலாக, கீட்டன் ஜென்னிங்ஸ், லியாம் டாசன் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பேட்டிங்கிற்கு ஜோ ரூட் உள்ளிட்டோரும், பந்தவீச்சுக்கு கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத் போன்றோரும் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios