Will india beat China in quarterbacks wait and see

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் இன்று காலிறுதியில் மோத இருக்கின்றன. வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சுதிர்மான் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியா காலிறுதிக்கு முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறை.

இந்த நிலையில், இன்று நடைபெறும் காலிறுதியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங்ஜியாவ் அல்லது உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான சன் யு ஆகியோரில் ஒருவருடன் மோதுகிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - என். சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் சென் கிங்சென் - ஜியா யிஃபான் இணையுடனோ அல்லது பாவ் யிஜின் - டாங் ஜின்ஹுவா இணையுடனோ மோதவுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டான் அல்லது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி - மானு அத்ரி இணை, லியு யுசென் - லி ஜுன்ஹுய் ஜோடியுடனோ அல்லது ஜாங் நான் - ஃபு ஹாய்ஃபெங் ஜோடியுடனோ மோதவுள்ளனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி - சாத்விக்சாய்ராஜ், சீனாவின் லு காய் - ஹுவாங் யாகியாங் ஜோடியுடன் மோத உள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்த இந்தியா, அதில் சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.