Who Wants to Win a Super Midwife Weight? - India or britian?

குத்துச்சண்டைப் போட்டியில் காமன்வெல்த் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி ஜூலை 13-ஆம் தேதி நடக்கிறது.

காமன்வெல்த் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் - பிரிட்டனின் லீ மார்காம் ஆகியோர் ஜூலை 13-ஆம் தேதி இலண்டனில் மோதுகின்றனர்.

தொழில்முறை குத்துச்சண்டையில் களம் கண்டுள்ள விஜேந்தருக்கு, இது 3-வது பட்டத்துக்கான போட்டியாகும்.

விஜேந்தர் இதுவரை தாம் களம் கண்ட 10 மோதல்களிலுமே வென்றுள்ள நிலையில், லீ மார்காம் தாம் போட்டியிட்ட 22 மோதல்களில், 17-ல் வெற்றி கண்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் விஜேந்தருக்கு இது முதல் போட்டியாகும். கடைசியாக அவர் கானாவின் எர்னெஸ்ட் அமுஸுவை வீழ்த்தி இரண்டு பட்டங்களை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம் லீ மார்காம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலீஸ் மிடில்வெயிட் பட்டத்துக்கான போட்டியில் பிரிட்டனின் ஜோ முலென்டரிடம் கண்ட தோல்விக்குப் பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.