ரோகித் சர்மாவை போல் தொடரில் இருந்து பாதியில் விலகிய சர்வதேச வீரர்கள் யார்? யார்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகிய நிலையில், அவரை போன்று தொடரில் இருந்து பாதியில் விலகிய சர்வதேச வீரர்கள் குறித்து பார்ப்போம்.
ரோகித் சர்மா அதிரடி நீக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்பி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஆனால் அவர் நீக்கப்படவில்லை; தானாக கடைசி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என இந்திய கேப்டன் பும்ரா தெரிவித்தார். ஒரு தொடரின் பாதியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் ஒருவர் நீக்கப்படுவது அல்லது விலகிக் கொள்வது இதுவே முதன்முறையாகும். ரோகித் சர்மாவை போல் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தொடரின் பாதியில் இருந்து விலகியிருக்கிறார்கள். அது குறித்து விரிவாக காண்போம்.
மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்)
2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் படுமோசமாக பேட்டிங் செய்தார். முதல் இரண்டு போட்டிகளில் 0, 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மிஸ்பா உல் ஹக் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார்.
தினேஷ் சண்டிமால் (இலங்கை முன்னாள் கேப்டன்)
2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் சண்டிமால், படுமோசமான ஃபார்மில் சிக்கித்தவித்து ரன்கள் அடிக்கத் தடுமாறினார். இதனால் அணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொடரில் பாதியில் இருந்து அவர் விலகினார். அதன்பிறகு லசித் மலிங்கா இலங்கையின் கேப்டனாக நியமிக்கப்பட்டு 2014 டி20 உலகக்கோப்பையை இலங்கை வென்றது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் டென்னிஸ் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்)
1974ம் ஆண்டு ஆஸ்திரேலியாஇங்கிலாந்து ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் டென்னிஸ் ஃபார்ம் ரன்கள் அடிக்க முடியாமல் சொதப்பினார். கேப்டன்சியிலும் அவர் மோசமாக செயல்பட்டதால் இங்கிலாந்து முதல் இரண்டு டெஸ்டுகளில் படுதோல்வி அடைந்தது. 3வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் மைக்கேல் டென்னிஸ் 4வது போட்டியில் இருந்து விலகினார். ஆனால் 5வது போட்டியில் அவர் அணிக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன்)
கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், மோசமான பார்மில் தவித்ததால் ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் பதவியையும் துறந்த அவர் கிரிக்கெடில் இருந்தும் அதிரடியாக ஓய்வு பெற்றார்.
பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து முன்னாள் கேப்டன்)
நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லமும் கடந்த 2019ம் ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
அலயஸ்டர் குக் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்)
2016ம் ஆண்டு பாதியில் இங்கிலாந்து கேப்டன் அலயஸ்டர் குக் தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அணியில் இருந்து விலகிய அவர் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.