Who all are applied for the post of Indian cricket coach?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் பிபஸ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ், இந்திய 'ஏ' அணியின் முன்னாள் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் வரும் 18-ஆம் தேதியோடு முடிகிறது. அதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.
எனவே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் சேவாக் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக், தனது அதிரடியால் பல்வேறு ஆட்டங்களின் முடிவை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியவர்.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் சேவாக்கிற்கு, பயிற்சியளித்த அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் பிசிசிஐ முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைப்படியே சேவாக் விண்ணப்பம் செய்துள்ளார்.
அவரைத் தவிர முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் பிபஸ், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ், இந்திய 'ஏ' அணியின் முன்னாள் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுடன் அனில் கும்ப்ளேவும் போட்டியில் இருக்கிறார்எ என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
