Which concluded the match in one hour Chen yuhpe Indus

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவின் ஆட்டத்தை ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் சீனாவீன் சென் யூஃபெ.

மலேசியாவின் குச்சிங் நகரில் மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யூஃபெயிடம் பங்கமாக தோல்விக் கண்டார். சென் யூஃபெய் 1 மணி 8 நிமிடங்களில் சிந்துவை வீழ்த்தினார்.

மற்றொரு முதல் சுற்றில் சாய்னா நெவால் 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் தோல்வி கண்டார்.

ஆனால், ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-11, 21-8 என்ற நேர் செட்களில் சீனாவின் கியாவ் பின்னை தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் 21-18, 18-21, 17-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியாவ் குவான் ஹாவ் - லூ சியா பின் இணையிடம் வீழ்ந்தனர்.