Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதிதான் மல்யுத்த வீரர் போராட்டம்! ராஜினாமா செய்யமுடியாது- WFIதலைவர் திட்டவட்டம்

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி என்றும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
 

wfi president Brij Bhushan Sharan Singh refused to resign amid indian wrestlers protest
Author
First Published Jan 20, 2023, 5:05 PM IST

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக் உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புதன்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3வது நாளாக தொடர்ந்துவருகிறது.

ஃபிட்டா, ட்ரிம்மா இருந்தால் தான் இந்திய அணியில் இடமா..? ஃபேஷன் ஷோவுக்கா ஆள் எடுக்குறீங்க..? கவாஸ்கர் அதகளம்

பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டினார். இதுமாதிரியான பாலியல் அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பஜ்ரங் புனியா தெரிவித்தார். 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், பாஜக எம்பி ஆவார். இவர் மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து புகார்களை முன்வைத்தனர். நள்ளிரவு 1.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமலேயே முடிந்தது. 

இதையடுத்து இன்று காலை 11.45 மணி முதல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கைகளில் காங்கிரஸின் கை சின்ன டாய்களை வைத்திருக்கிறார்கள். எனக்கெதிராக இதுமாதிரியான சதிகளை 30 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் செய்தது. இப்போது மீண்டும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். 

ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..! நியூசி.,க்கு எதிரான ODI-யில் ஜெயித்த இந்திய அணிக்கு இப்படியொரு சோதனையா..?
 
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். பிரியாங்கா காந்தி மற்றும் தீபிந்தர் ஹூடா ஆகியோரின் டுவீட்கள் அதை உறுதி செய்திருக்கின்றன என்றார் பிரிஜ் பூஷன்.

Follow Us:
Download App:
  • android
  • ios