புதுடெல்லி,

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய 4 அணிகள் கலந்து கொள்ளும் ஆண்கள் ஆக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் வருகிற 23–ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கால் முட்டி காயத்தால் அவதிப்படும் இந்திய கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வி.ஆர்.ரகுநாத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டன் பொறுப்பு ரூபிந்தர் பால் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. கோல் கீப்பர் பணியை ஆகாஷ் சிக்தே கவனிப்பார். அபினவ்குமார் பான்டே 2–வது கோல் கீப்பராக இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி வருமாறு:

அபினவ்குமார் பான்டே, ஆகாஷ் சிக்தே, ரூபிந்தர் பால் சிங், பர்தீப் மோர், வி.ஆர்.ரகுநாத் (கேப்டன்), பிரேந்திர லாக்ரா, கோதாஜித் சிங், சுரேந்தர்குமார், சிங்லென்சனா சிங், மன்பிரீத்சிங், சர்தா£ர் சிங், எஸ்.கே.உத்தப்பா, தல்விந்தர் சிங், நிக்கின் திம்மையா, அக்பான் யூசுப், முகமது அமிர் கான், சத்பிர் சிங், ஆகாஷ் தீப் சிங்.