Vishwanathan Anand match draw with Chinese player
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றிலும் சீன வீரருடன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர்.
ஆனந்த் - லிரென் இடையே நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் 35-வது நகர்த்துதலில் சமன் ஆனது.
இந்ததப் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களையும் ஆனந்த் சம்ப செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதர 3-வது சுற்றுகளில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் - ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் மோதிய ஆட்டத்தில் மட்டும் கார்ல்சென் வெற்றி பெற்றார்.
பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் - அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா, அமெரிக்காவின் வீஸ்லி சோ - சகநாட்டவர் ஹிகாரு நகாமுரா, அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியாரோவ் - ரஷியாவின் செர்கேய் கர்ஜாகின் ஆகியோர் மோதிய ஆட்டங்களும் சமனில் முடிந்தன என்பது கூடுதல் தகவல்.
