ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகர் நக்சுக்கு பேட்டி கொடுத்த கோலி... WPL பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறிய கருத்தை கேட்டு குப்பென சிரித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், WPL பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டி ஒன்றில்... தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார். தொடர்ந்து பேசிய அவர், கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். நானும் அத்தகைய சாதனைகளை படைப்பேன் என நம்புகிறேன். அதற்கு நீண்ட காலம் ஆகும். பெங்களூரு அணிக்காக பல விஷயங்களை விராட் கோலி சாதித்திருக்கிறார். அதையே, நானும் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து தான் நடிகர் நக்ஸ் கோலியிடம் கேட்க... குப்பென சிரித்து... அவர் ரியாக்ஷன் பதில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, IPL போட்டியில், ஆர்சிபியின் 15 வருட தொடர் தோல்விகளைப் பற்றி, நடிகர் நக்சுடன் மிகவும் நகைச்சுவையான உரையாடலில் பங்கேற்றார்.

அப்போது நக்ஸ் RCB இன் மகளிர் பிரீமியர் லீக் (WPL) அணிக்கும் - ஆண்கள் அணிக்கும் இடையே ஒரு நகைச்சுவையான ஒப்பீடு செய்தார். மகளிர் அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, கோலியை போல், பெரிய சாதனைகளை படைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு இருந்தது குறித்து, விளையாட்டாக கேள்வி எழுதி நக்ஸ், கோலியை கிண்டல் செய்தார். இருப்பினும், RCB இன் பெண்கள் அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ஆண்கள் அணியின் மோசமான IPL சாதனையை சுட்டிக்காட்டுகிறது என்று அவர் விரைவாக கூறினார்.
'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

கோஹ்லி இந்த கருத்தை மிகவும் வேடிக்கையாகக் எடுத்து கொண்டு, மெளனமாக சிரித்தார். பின்னர் சிரிப்பை நிறுத்த முடியாமல் குப்பென சிரித்தார். இந்த குறிப்பிட்ட பகுதி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
