சகோதார பாசத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. 

ரக்‌ஷா பந்தனை ஒட்டி, நேற்று பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன்பிறந்த சகோதரர்கள் இல்லாத பெண்கள், தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

சினிமா மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள் பலரும் தங்களது சகோதர சகோதரிகளுடனான நினைவுகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது சகோதரியுடன் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, உலகம் முழுக்க உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் கோலி, இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார். 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 440 ரன்களை குவித்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்று மீண்டெழுந்துள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் கோலியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.