virat kohli overtake ricky ponting

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலக அளவில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ரிக்கிபாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி கோலி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

இன்று விளையாடிக்கொண்டிருப்பது விராட் கோலியின் 200-வது ஒருநாள் போட்டி. 375 போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், 30 சதங்களை அடித்துள்ளார்.

463 போட்டிகளில் விளையாடியுள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 49 சதங்களுடன் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

375 போட்டிகளில் விளையாடி பாண்டிங் அடித்த சதத்தை விட ஒரு சதம் அதிகமாக வெறும் 200 போட்டிகளில் அடித்து அசத்தியுள்ளார் கோலி. இதன்மூலம் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை மூன்றாமிடத்திற்கு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் விராட் கோலி.

இந்த பட்டியலில் 28 சதங்களுடன் இலங்கையின் ஜெயசூர்யா நான்காவது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணியின் ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் முறையே 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளனர்.