Virat Kohli is the highest ranked player in ICC rankings
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த கோலி தற்போது இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளார்.
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 176 ஓட்டங்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், முதலிடத்துக்கு வந்துள்ளார்.
அதேபோல், 5-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ரோஹித் சர்மா 2 இடங்கள் இறங்கி, 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில், அணிகளுக்கான பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதை அடுத்து தென் ஆப்பிரிக்கா இந்த முன்னேற்றத்தை அடைந்து அசத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா தலா 120 புள்ளிகளுடன் இருந்தாலும், தசம புள்ளிகள் வித்தியாசத்திலேயே இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
வரும் 22-ஆம் தேதி நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால், மீண்டும் முதலிடத்திற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா ஓரிடம் சறுக்கி 6-வது இடத்தியயும், சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஓரிடம் சறுக்கி, 8-வது இடத்தையும் பிடித்துள்லனர்.
பாகிஸ்தானின் ஹசன் அலி ஆறு இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
