Virat Kohli is the fifth recipient of the award. Who else is this award?

பிசிசிஐ சார்பில் வழங்கப்படும் பாலி உம்ரிகர் விருதை ஐந்தாவது முறையாக இந்திய அணியின் விராட் கோலி பெறுகிறார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வரும் இளம் மற்றும் மூத்த வீரர்களுக்கு, பிசிசிஐ ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. 

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் (2016 - 17 & 2017 - 18) சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

ஜூன் 12-ஆம் தேதி பெங்களூரில் விருது வழங்கும் விழா நடைபெறும். இந்த விழாவில் மகளிர் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளாகச் செயல்பட்ட ஹர்மண்ப்ரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை பாலி உம்ரிகர் விருது பெற்றவர்கள்:

விராட் கோலி (ஐந்து முறை: 2011/12, 2014/15, 2015/16, 2016/17, 2017/18)

சச்சின் டெண்டுல்கர் (2 முறை: 2006/07, 2009/10)

சேவாக், 2007/08

கெளதம் கம்பீர், 2008/09

ராகுல் டிராவிட், 2010/11

அஸ்வின், 2012/13

புவனேஸ்வர் குமார், 2013/14