Virat Kohli gets ICC Cricketer of the Year award He is the best captain ...

2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த கேப்டன் ஆகிய விருதுகளை பெறுகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

துபையில் நேற்று ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை விராட் கோலி கைப்பற்றினார்.

அத்துடன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்ட அவர், 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாகவும் அவர் தேர்வாகியுள்ளார்.

இந்த விருதுகளுக்கான மதிப்பீட்டுக் காலத்தில் (2016 செப்டம்பர் 21 முதல் 2017 இறுதி வரை) கோலி டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 8 சதங்களுடன் 2,203 ஓட்டங்கள் விளாசியுள்ளார். 77.80 ஓட்டங்களை சராசரியாக வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களுடன் 1,818 ஓட்டங்களை குவித்து 82.63 ஓட்டங்களை சராசரியாகக் கொண்டுள்ளார். டி20 போட்டிகளில் 299 ரன்களுடன், 153-ஐ ஸ்டிரைக் ரேட்டாகக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

மதிப்பீட்டுக் காலத்தில் அவர் 16 போட்டிகளில் 8 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 1,875 ஓட்டங்கள் அடித்ததுடன், 78.12 ஓட்டங்களை சராசரியாக வைத்துள்ளார்.