சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்டர் என்ற பெயர் பெற்றுள்ள கோலி, போட்டிக்கு போட்டி சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். அதிலும் நடந்துவரும் தென்னாப்பிரிக்க தொடரில் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். மேலும் பல சாதனைகளை குவிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

டெஸ் தொடரில் 286 ரன்களும் ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 558 ரன்களும் குவித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர், விரைவில் 17,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைகளை எல்லாம் கோலி படைத்தார்.

முதல் டி20 உட்பட இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை 870 ரன்கள் குவித்துள்ளார் கோலி. ஒரு சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ், 1045 ரன்களுடன் முதலிடத்திலும் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் டான் பிராட்மேன் 970 ரன்களும் குவித்துள்ளனர்.

இன்னும் இரண்டு டி20 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை 844 ரன்களை குவித்துள்ள கோலி, இன்னும் 105 ரன்கள் எடுத்தால் டான் பிராட்மேனை முந்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எஞ்சிய இரண்டு டி20 போட்டிகளில் 130 ரன்கள் எடுத்தால், ஒரே தொடரில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி பெறலாம். 175 ரன்கள் எடுத்தால் விவியன் ரிச்சர்ட்ஸை முந்தி சாதனை படைக்கலாம். ஆனால் எஞ்சிய இரண்டு போட்டிகளும் டி20 போட்டிகள் என்பதால், விவியன் ரிச்சர்ட்ஸை வீழ்த்துவது சற்று கடினம் தான்.