விராட் கோலி....!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனிலி வியாட்க்கு தனது பேட்டை பரிசளித்து உள்ளார்.

விராட் கோலி ,தான் நீண்ட காலமாக காதலித்து வந்த அனுஷ்கா ஷர்மாவை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.2014-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரை இறுதியில் கோலி 72 ரன்கள் எடுத்தார். 

அதே சமயத்தில்,விராட் கோலியின் அபார ஆட்டத்தை பார்த்து,அதில் மனதை பறிகொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனிலி வியாட் கடந்த 2014  ஆம்  ஆண்டு ட்விட்டர் மூலம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

பின்னர் வரை சந்தித்த விராட் கோலி,வீராங்கனைக்கு, இது போன்று  ட்விட்டரில் பதிவிட கூடாது என்று தெரிவித்து,தன்னுடைய  தீவிர ரசிகையான அவருக்கு,விராட் கோலி என பெயரிடப்பட்ட பேட்டை பரிசாக வழங்கி  உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை தற்போது நினைவு கூர்ந்துள்ள டேனிலி,

கோலி வழங்கிய அந்த பேட்டை இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையே மும்பையில் வருகிற 23-ந்தேதி தொடங்கும் போட்டிகளில் பயன்படுத்தப்போவதாக அவர் தெரிவித்து உள்ளார்.