ஆஸ்திரேலிய தொடரை இந்தியா தான் வெல்லும்!! முன்னாள் வீரர் சொல்லும் 2 காரணங்கள்

https://static.asianetnews.com/images/authors/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9.jpg
First Published 8, Nov 2018, 2:32 PM IST
vinod kambli believes india will win australia series
Highlights

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் சீன் போடும் அணி அல்ல என்பதை ஆஸ்திரேலியாவில் நிரூபித்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
 

இந்திய மண்ணில் அசத்தலாக ஆடும் இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. அதனால் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று, தாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சிறப்பாக ஆடும் அணி தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் சீன் போடும் அணி அல்ல என்பதை ஆஸ்திரேலியாவில் நிரூபித்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என பெரும் வேகப்பந்து வீச்சு படையே உள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சையும் பவுன்சரையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கும் ரோஹித் உள்ளார். கோலி, ரஹானே, புஜாரா, ராகுல் இவர்களோடு இளம் திறமை பிரித்வி ஷா என பேட்டிங்கிலும் இந்திய அணி வலுவாகவே உள்ளது.

நம் அணி வலுவாக இருக்கும் அதே நிலையில், ஆஸ்திரேலிய அணி நலிவடைந்துள்ளது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்களை இழந்து தவிக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் அவர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பலம். அதனால் இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், அசாருதீன் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியும் ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு சாதகம். அதை அணி நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோலி ரன் வேட்கையில் உள்ளார். ரன்களை குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். களத்தில் 110 சதவிகித உழைப்பை கோலி வழங்குகிறார். அணியும் வலுவாகவே உள்ளது. எனவே ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புதான் பிரகாசமாக இருக்கிறது என்று வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.
 

loader