Vijay Hazare Trophy tamilagam Lost 4th time

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக தொடர் தோல்வியை சந்துத்துள்ளது தமிழகம். இந்தமுறை ஆந்திர பிரதேசத்திடம்.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திர பிரதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் 48.5 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகர் பரத் அதிகபட்சமாக 82 ஓட்டங்கள் அடித்தார். பூபதி சுமந்த் 62 ஓட்டங்கள், நரேன் ரெட்டி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தமிழக தரப்பில் ரஹீல் ஷா 2 விக்கெட்கள், அஸ்வின் கிறிஸ்ட், கிரிஷ்ணமூர்த்தி விக்னேஷ், வாஷிங்டன் சுந்தர், பாபா அபராஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய தமிழக அணியில் ஜே.கௌசிக் அதிகபட்சமாக 56 ஓட்டங்கள் விளாசினார். கெüஷிக் காந்தி 44 ஓட்டங்கள், ஜெகதீசன் 40 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆந்திர பிரதேச தரப்பில் சிவகுமார், ஐயப்பா, பார்கவ், ஹனுமா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இப்படி, தமிழகம் தனது 5-வது ஆட்டத்தில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆந்திர பிரதேசத்திடம் தோல்வி கண்டது.