ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா- உக்ரைனின் நாடியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா (33) 2017-ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு காயம் மற்றும் குழந்தை பேறு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் சனியா களம் இறங்கினார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வந்தனர். இதனையடுத்து, அரையிறுதி போட்டியில் லோவேனியாவின் தமாரா ஜிடான்சிக், செக் குடியரசின் மேரி போஸ்கோவா ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  

இதையும் படிங்க;-  டிஎஸ்பி கையை வெட்டிய ரவுடிக்கு விருந்து வைத்து கவனித்த போலீஸ்... வைரலாகும் வீடியோ..!

இதனையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் ஜாங் - பெங் ஜோடியை, சானியா ஜோடி எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவின் ஷாய் பெங், ஷாய் ஹாங் ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கணக்கில் வெற்றிப் பெற்று ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் கோப்பையை சானியா ஜோடி கைப்பற்றியது. சானியாவுக்கு இரட்டையர் பிரிவில் பெறும் 42-வது பட்டம் இதுவாகும். கடந்த 2007-ம் ஆண்டு இரட்டையர் பிரிவில் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானியே மாட்டெக்குடன் சேர்ந்து சானியா முதல் பட்டத்தை வென்றார். அதன்பின் இரட்டையர் பிரிவில் 42 பட்டங்களை சானியா வென்றுள்ளார். வெற்றி பெற்ற சானியா, நாடியா ஜோடிக்கு ரூ.9.64 லட்சம்( 13,580 டாலர்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் தொடங்க உள்ள கிராண்ட் ஸ்லாம் ஓபன் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா பங்கேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.