Update on the state of junior hockey tournament In the quarter-studded teams in the quarterfinals

வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான மாநில ஜூனியர் ஹாக்கி போட்டியில் திருவாரூர், கோவை, இராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய அணிகள் வெற்றி பெற்று காலிறுதியில் கால் பதித்தன.

தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான ஐந்தாவது மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் திருவாரூர் மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்ட அணியை தோற்கடித்தது.

இரண்டாவது ஆட்டத்தில் கோவை அணி 3-2 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தியது.

மூன்றாவது ஆட்டத்தில் திருச்சி அணி 7-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தி கர்சித்தது.

பிற்பகலில் நடைபெற்ற ஆட்டங்களில் இராமநாதபுரம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியை வீழ்த்தி அசத்தியது.

வேலூர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் அணியை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் திருநெல்வேலி அணி 14-0 என்ற கோல் கணக்கில் தேனி அணியைத் தோற்கடித்ட்து கலக்கியது.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்ற அனைத்து அணிகளும் காலிறுதியில் கலக்க தயாராக இருக்கின்றன.