ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசனில் தான், பவுலர்கள் அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளனர். ஒரு சீசனில் ஒரு பவுலரால் அதிக ரன்கள் கொடுக்கப்பட்டதில், இந்த சீசனில் தான். 

ஐபிஎல் 11வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இறுதி போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

இந்த சீசனின் லீக் போட்டிகள் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடித்த ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் தான் இறுதி போட்டியில் மோதின. இந்த இரண்டு அணிகளில் சென்னை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சம பலத்துடன் ஆடியது.

ஆனால் இந்த சீசனின் சிறந்த பவுலிங் அணியாக வலம் வந்தது ஹைதராபாத் அணி தான். அந்த அணியின் டாப் ஆர்டர்கள் சிறப்பாக ஆடியநிலையில், பல போட்டிகளில் மிடில் ஆர்டர்கள் சொதப்பினர். அப்போதெல்லாம், ஹைதராபாத் அணி, பவுலிங்கால் தான் வென்றது. புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ஷாகிப் அல் ஹாசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.

சிறந்த பவுலிங் அணியாக ஹைதராபாத் வலம்வந்த போதிலும், பவுலிங்கில் மோசமான சாதனையை அந்த அணி பவுலர் தான் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் ஒரு பவுலரால் அதிகமான ரன்கள் வழங்கப்பட்டது இந்த சீசனில் தான்.

ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல் தான் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்த சீசனில் மட்டும் 547 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

சித்தார்த் கவுலுக்கு அடுத்தபடியாக சென்னை வீரர் பிராவோ உள்ளார். இவரும் இந்த சீசனில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த சீசனில் 533 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

ஒரு சீசனில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர்களின் பட்டியல்:

1. சித்தார்த் கவுல் - 547 ரன்கள் (2018)

2. பிராவோ - 533 ரன்கள் (2018)

3. உமேஷ் யாதவ் - 508 ரன்கள் (2013)

4. மெக்லேநகன் - 507 ரன்கள் (2017)

5. பிராவோ - 497 ரன்கள் (2013)

6. பிராவோ - 494 ரன்கள் (2016)