U-17 football Germany - Colombia teams face today Who deserves to qualify for quarter-finals?
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி - கொலம்பியா அணிகள் இன்று மோதுகின்றன.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டெல்லியில் இன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும் தங்களின் குரூப் சுற்றில் தலா இரு ஆட்டங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன. இந்த ஆட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
டெல்லியில் இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவும், பராகுவேவும் மோதுகின்றன.
பராகுவே அணி குரூப் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்றதோடு, 10 கோல்களை அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலிறுதிக்கு முந்தையச் சுற்றைப் பொறுத்தவரையில் கூடுதல் நேரம் கிடையாது என்பதும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்காவில்லை என்றால் வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் ஔட் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் கொசுறு தகவல்.
