சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் இந்தியா 29 தங்கம் 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. சீனா 214 தங்கம், 167 வெள்ளி மற்றும் 140 வெண்கலம் என்று 521 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று ஆண்களுக்கான நடந்த நீளம் தாண்டுதல் T64 பிரிவில் இந்தியாவின் தர்மராஜ் சோலைராஜ் 6.80 மீ தூரம் வரையில் தாண்டி சாதனை படைத்து தங்கம் வென்று இந்தியாவிற்கு 25ஆவது தங்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் மூலமாக இந்தியா 98ஆவது பதக்கத்தை பெற்றது. இதே போன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SU5 பிரிவில் துளசிமதி முருகேசன் தங்கம் வென்றார். இந்த நிலையில் தான் தங்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசிமது முருகேசன் ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hangzhou Asian Para Games 2022: 1500மீ தடகளப் போட்டியில் ராமன் சர்மா தங்கம் வென்று அசத்தல்!
