தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டி கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் விளையாடிய 5 லீக் போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான்:
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப், முகமது வசீம் ஜூனியர்.
தென் ஆப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, தப்ரைஸ் ஷம்சி, ரஸிவ் வான் டெர் டுசென்.
India vs England: ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகல்? உள்ளே வரும் அக்ஷர் படேல்?
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்குப் பதிலாக முகமது வசீம் ஜூனியர் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இடம் பெற்றுள்ளார். மேலும், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், கஜிசோ ரபாடா மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டெம்பா பவுமா, லுங்கி நிகிடி, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
Hangzhou Asian Para Games 2022: 1500மீ தடகளப் போட்டியில் ராமன் சர்மா தங்கம் வென்று அசத்தல்!
இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய கடைசி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் ஹாட்ரிக் தோல்வி அடையும். சென்னையில் நடக்கும் கடைசி போட்டி என்பதால், பாகிஸ்தான் வெற்றியோடு பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!
இரு அணிகளும் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 82 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 51 ஒரு நாள் போட்டியிலும், பாகிஸ்தான் 30 ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று இரு அணிகளும் 5 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 3 முறை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் ஏலம் – எப்போது நடக்கிறது தெரியுமா?
