India vs England: ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகல்? உள்ளே வரும் அக்‌ஷர் படேல்?

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகயிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Hardik Pandya ruled out from World Cup due to injury?

இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரையில் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா மட்டுமே விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும் உள்ளன.

Hangzhou Asian Para Games 2022: 1500மீ தடகளப் போட்டியில் ராமன் சர்மா தங்கம் வென்று அசத்தல்!

இதையடுத்து 5, 6 மற்றும் 7 இடங்கள் முறையே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!

அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். மேலும், வரும் 29ஆம் தேதி நடக்க இருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும், வரும் நவம்பர் 2ஆம் தேதி நடக்க இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அவர் இடம் பெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 5 ஆம் தேதி நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தனிநபர் பிரிவில் கை இல்லாத வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று சாதனை!

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்ட அக்‌ஷர் படேல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் ஏலம் – எப்போது நடக்கிறது தெரியுமா?

ஆனால், அக்‌ஷர் படேல் அணியில் இடம் பெற வேண்டுமென்றால், ஐசிசி விதிப்படி ஹர்திக் பாண்டியாவை எஞ்சிய உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்க வேண்டும். ஆனால், அதற்கு பிசிசிஐ தயாராக இல்லை. மேலும், ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவை நீக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் பெரிதாக ஏற்பட்டுள்ளது. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முழுமையாக காயம் குணமடையால் அங்கிருந்து வெளியில் வர முடியாது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா முழுமையாக குணமடையும் வரையில் பிசிசிஐ காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ENG vs SL: 1996க்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இங்கிலாந்து!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios