top ten indian players sale in IPL auction

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இதுவரை ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திவந்த வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். மாறாக இந்திய இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தோனி, கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டனர். ஏலத்தில் விடப்பட்ட வீரர்களில் அதிகவிலைக்கு ஏலம் போன முதல் 10 வீரர்களை பார்ப்போம்..

அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 இந்திய வீரர்கள்:

1. ஜெய்தேவ் உனாட்கட் - ரூ. 11.5 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

2. லோகேஷ் ராகுல் - ரூ. 11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

3. மனீஷ் பாண்டே - ரூ. 11 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

4. க்ருணல் பாண்டியா - ரூ. 8.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

5. சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

6. கேதர் ஜாதவ் - ரூ. 7.8 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

7. ரவிச்சந்திரன் அஷ்வின் - ரூ.7.6 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

8. தினேஷ் கார்த்திக் - ரூ. 7.4 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

9. ராபின் உத்தப்பா - ரூ. 6.4 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

10. இஷான் கிஷான் - ரூ. 6.2 கோடி (மும்பை இந்தியன்ஸ்)