Asianet News TamilAsianet News Tamil

2018ம் ஆண்டின் வியக்கவைக்கும் டாப் 5 கேட்ச்கள்!! வீடியோ

2018ம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2019ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில், 2018ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் பிடிக்கப்பட்ட கேட்ச்களில் டாப் 5 கேட்ச்களைப் பார்ப்போம்.
 

top 5 amazing catches in 2018
Author
India, First Published Dec 31, 2018, 4:41 PM IST

2018ம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2019ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்நிலையில், 2018ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் பிடிக்கப்பட்ட கேட்ச்களில் டாப் 5 கேட்ச்களைப் பார்ப்போம்.

1. டிரெண்ட் போல்ட் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஐபிஎல்)

ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலியின் கேட்ச்சை பவுண்டரி லைனில் அருமையாக பிடித்தார் டெல்லி கேபிடள்ஸ் அணியின் வீரர் டிரெண்ட் போல்ட். பவுண்டரி லைனில் நின்ற போல்ட் தாவி கேட்ச்சை பிடித்துவிட்டு கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் பவுண்டரி லைனில் உடல் பட்டுவிடாதபடி உடலின் வேகத்தை கட்டுப்படுத்தினார். இந்த அபாரமான கேட்ச்சை கண்டு மிரண்டுபோனார் கோலி.

2. டிவில்லியர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ஐபிஎல்)

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் பவுண்டரி லைனில் தாவிப்பிடித்த கேட்ச் ரசிகர்களை மட்டுமல்லாமல் வீரர்களையும் மிரளவிட்டது. அந்த கேட்ச் சூப்பர் மேன் கேட்ச் என்று அழைக்கப்படுகிறது. அந்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் பிடித்தவுடன் கோலியின் ரியாக்‌ஷனே மிகவும் பிரபலமானது. 

3. கோலி vs ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பிற்கு ஸ்லிப் ஃபீல்டிங்கில் ஒற்றை கையில் கோலி பிடித்த கேட்ச் அபாரமானது. 

4. தோனி vs வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தொடக்க வீரர் ஹேம்ராஜ் தூக்கி அடித்த பந்து ஃபைன் லைக் திசையில் உயரே பறந்தது. விக்கெட் கீப்பிங்கிலிருந்து அதிவேகமாக ஓடி அந்த கேட்ச்சை பாய்ந்து பிடித்தார் தோனி. 

5. உஸ்மான் கவாஜா vs இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் கோலியின் கேட்ச்சை அபாரமாக பிடித்தார் உஸ்மான் கவாஜா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 3 ரன்னில் வெளியேற்றப்பட்டார். இது அந்த அணிக்கு நம்பிக்கையளித்தது. அந்த கேட்ச்சை உஸ்மான் கவாஜா அருமையாக பிடித்திருந்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios