Today begins the 57th National Open Athletic Championship

சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுத் தொடங்குகிறது.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 1200 பேர் கலந்து கொள்கின்றனர். 

இந்தப் போட்டியில் தமிழக வீரரான இலட்சுமணன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5000 மீ. மற்றும் 10000 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றுள்ளார் இலட்சுமணன்.

இவர், சமீபத்தில் துர்க்மேனிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இண்டோர் தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.

இதுதவிர முகமது அனாஸ் 400 மீ. ஓட்டம், கணபதி கிருஷ்ணன் ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டி, பூவம்மா மகளிர் 400 மீ. ஓட்டம், அன்னு ராணி ஈட்டி எறிதல் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர் என்பது கொசுறு தகவல்.