TNPL update Coimbatore Kings defeated Trichy Warriors

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 28-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸை வென்றனர் கோவை கிங்ஸ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 28-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக நிலேஷ் சுப்பிரமணியன் 56 பந்துகளில் 57 ஓட்டங்களும், கெளஷிக் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

கோவை தரப்பில் ஹரீஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய கோவை அணியில் முரளி விஜய் டக் அவுட்டானார். இருப்பினும், சூர்யபிரகாஷ் 21 பந்துகளில் 30 ஓட்டங்களும், சீதாராம் 41 பந்துகளில் 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதாக அமைந்தது.

பின்னர் வந்த அக்ஷய் சீனிவாசன் 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை எடுக்க, கோவை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. கண்டது

திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றிப் பெற்றதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது கோவை கிங்ஸ்.