- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: இந்திய அணியில் நீக்கப்பட்டதால் தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி! வைரல் வீடியோ!
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் நீக்கப்பட்டதால் தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி! வைரல் வீடியோ!
Vaibhav Suryavanshi: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி தேம்பி தேம்பி அழுத வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி
இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணி தோற்றுக் கொண்டிருந்தபோது, அவர் டக் அவுட்டில் தனியாக அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய அணியில் நீக்கப்பட்ட வைவவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே இந்திய அணிக்குத் தேர்வானார். ஆனால், அப்போது அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் அவர் களமிறங்கினார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியால் இந்த மூன்று போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.
மூன்று போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சன் அணிக்குத் திரும்பினாலும், இந்திய அணியின் நிலைமை மாறவில்லை.
Look at the way Vaibhav Suryavanshi is crying after being dropped, sitting alone in disappointment. 💔
It feels like a harsh decision by Gautam Gambhir and Shreyas Iyer. 🥹 pic.twitter.com/HbTn8Nxqrr— Sonu (@Cricket_live247) July 11, 2026
இங்கிலாந்து தொடரில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி
தனது 15 வயது 99-வது நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவுக்காக விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் அறிமுகமானார். ஆனால், அவர் மீது வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மூன்று போட்டிகளிலும் அவர் முறையே 14, 13 மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் மோசமான தோல்வி
அயர்லாந்து தொடரில் 2 டி20 போட்டிகளில் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இப்போது இங்கிலாந்து தொடரிலும் அனைத்திலும் தோற்று வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 6 டி20 போட்டிகளில் தோற்பது இதுவே முதன்முறையாகும். இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

