MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • World Cup 2030: அடுத்த உலகக் கோப்பையில் 64 அணிகளா? FIFA தலைவர் கொடுத்த மெகா அப்டேட்!

World Cup 2030: அடுத்த உலகக் கோப்பையில் 64 அணிகளா? FIFA தலைவர் கொடுத்த மெகா அப்டேட்!

FIFA World Cup : 2030-ல் நடைபெற உள்ள 100-வது உலகக் கோப்பையை 64 அணிகளுடன் நடத்த FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ திட்டமிட்டுள்ளார். இந்த யோசனை தீவிர பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 13 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
FIFA World Cup expansion
Image Credit : X

FIFA World Cup expansion

கால்பந்து உலகை மீண்டும் ஒருமுறை பரபரப்பாக்கியிருக்கிறார் FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ. 2030-ல் நடக்கப்போகும் 100-வது உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்தும் திட்டம் தீவிர பரிசீலனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் முதல்முறையாக 48 அணிகளுடன் நடந்த உலகக் கோப்பை மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் முடிந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய உடனேயே இன்ஃபான்டினோ இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுவிஸ் ஊடகமான 'ப்ளூவின்' (Bluewin) க்கு அளித்த பேட்டியில், "உலகக் கோப்பை என்பது ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
64 அணிகளா?
Image Credit : Grok AI

64 அணிகளா?

தற்போதைய 48 அணிகள் கொண்ட வடிவத்தை '100 சதவிகித வெற்றி' என்று இன்ஃபான்டினோ குறிப்பிட்டார். "உலகக் கோப்பை என்பது முழு உலகிற்குமானது, ஐரோப்பாவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் மட்டுமல்ல. உலகக் கோப்பையில் விளையாடுவது ஒவ்வொரு நாட்டின் கனவு. சிறிய நாடுகளுக்கு நாம் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் கால்பந்து தரத்தை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தை இழந்துவிடுவார்கள். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, FIFA-வின் சம்பந்தப்பட்ட குழுக்கள் 64 அணிகள் கொண்ட வடிவத்திற்கு மாறுவது குறித்து விரிவாக விவாதிக்கும்," என்று இன்ஃபான்டினோ கூறினார்.

Related Articles

Related image1
FIFA World Cup 2026: பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின்; அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை!
Related image2
FIFA : "மெஸ்ஸியும் அர்ஜென்டினாவும் வெளியேறக் கூடாதுன்னு FIFA நினைச்சது!" - எகிப்து கோச் பகீர் குற்றச்சாட்டு
34
கிளம்பும் எதிர்ப்பு
Image Credit : Asianet News

கிளம்பும் எதிர்ப்பு

64 அணிகள் கொண்ட உலகக் கோப்பை நடைமுறைக்கு வந்தால், தற்போதுள்ள சிக்கலான குரூப் நிலை சமன்பாடுகள் (சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை) முற்றிலுமாக நீக்கப்படும். தலா நான்கு அணிகள் கொண்ட 16 குழுக்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக்-அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) தகுதி பெறும். இதனால், போட்டியின் மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 104-லிருந்து 128 ஆக உயரும். அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிக நாடுகளுக்கு உலக அரங்கில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

44
அடுத்த உலகக்கோப்பை
Image Credit : Getty

அடுத்த உலகக்கோப்பை

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான UEFA, முக்கிய உள்நாட்டு லீக்குகள் மற்றும் வீரர்கள் சங்கங்கள் FIFA-வின் இந்த விரிவாக்க நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. ஏற்கனவே அதிகப்படியான போட்டிகளால் வீரர்கள் கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். போட்டிகளை மேலும் அதிகரிப்பது வீரர்களின் கெரியரை பாதிக்கும் என்பது அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது. 2030 உலகக் கோப்பை, வரலாற்றில் முதல்முறையாக மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகளில் (ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ, உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று போட்டிகள் மட்டுமே அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவேயில் நடைபெறும். தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு முன்மொழிந்த இந்த 64 அணிகள் திட்டத்திற்கு FIFA பச்சைக்கொடி காட்டினால், 2030-ஆம் ஆண்டு கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக அது மாறும்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
FIFA உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் நீக்கப்பட்டதால் தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி! வைரல் வீடியோ!
Recommended image2
India's Defeat: இங்கிலாந்தில் படுதோல்வி.. இந்திய அணி கோட்டை விட்ட 5 இடங்கள்..!
Recommended image3
Vaibhav Suryavanshi: 15 வயது வீரரை தூக்கிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? எதிர்காலத்தை பாழாக்காதீர்கள்! இந்திய அணியை கிழித்து தொங்கவிட்ட ஸ்வான்!
Related Stories
Recommended image1
FIFA World Cup 2026: பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின்; அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை!
Recommended image2
FIFA : "மெஸ்ஸியும் அர்ஜென்டினாவும் வெளியேறக் கூடாதுன்னு FIFA நினைச்சது!" - எகிப்து கோச் பகீர் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved