TNPL update chepauk Super Gillis suppressed Karaikudi kalai...

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடக்கியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் காரைக்குடி காளை அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சென்னையில் நேற்ரு மோதின.

இந்த ஆட்டம் மழை காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட் செய்த காரைக்குடி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் லோகேஷ்வர் 46 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் கோபிநாத் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள், கேப்டன் சதீஷ் 18 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காரைக்குடி அணி தரப்பில் சாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.