This team is playing Ranji Cricket in 2017-18 season ...
ரஞ்சி கிரிக்கெட் 2017 - 18 சீசனில் விளையாடப்போகும் அணியின் விவரத்தை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
ரஞ்சி கிரிக்கெட் 2017 - 18 சீசன் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்குகிறது. அதனை முன்னிட்டு தமிழக உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக உத்தேச அணியில் அபிநவ் முகுந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த உத்தேச அணியை எஸ்.சரத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக உத்தேச அணியின் விவரம்:
அபிநவ் முகுந்த், முரளி விஜய், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சூர்ய பிரகாஷ், முகுந்த், கெளஷிக் காந்தி, அபராஜித், இந்திரஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன்,
லோகேஷ்வர், அனிருத் சீதா ராம், ராதாகிருஷ்ணன், பிரதாஷ் ரஞ்சன் பால், ஜே.கெளஷிக், ராஹில் ஷா, விக்னேஷ், ரோஹித், முகமது, வி.லட்சுமணன், விஷால் வைத்யா.
அணியின் பயிற்சியாளர்:
ரிஷிகேஷ் கனித்கர், உதவிப் பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்: எல்.பாலாஜி, பீல்டிங் பயிற்சியாளர்: பிரசன்னா.
