These guys are confident in the final of the French Open contest ...
பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் மற்றும் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் அரையிறுதி ஆட்டம் ஒன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிமோனோ ஹலேப்பும், முன்னாள் சாம்பியன் முகுருஸாவும் மோதினர்.
இதில் 6-1, 6-4 என எளிதில் வென்று சிமோனா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் அவர் தனது முதல்நிலை அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.
இதுகுறித்து சிமோனா, "இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மூன்றாவது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளேன். இது மனதுக்கு ஊக்கத்தை தந்துள்ளது" என்றார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க நாட்டு வீராங்கனைகள் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் - மடிசன் கீய்ஸ் ஆகியோர் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோன் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து ஸ்லோன், "எனது நெருங்கிய தோழிக்கு எதிராக ஆடுவது கடினமானது. எனினும் இதில் முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.
