These are the teams that have won the All India Volleyball tournament.

அகில இந்திய கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி, தென் மத்திய இரயில்வே அணி மற்றும் தமிழ்நாடு யூத் அணி வெற்றிப் பெற்றன.

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி மற்றும் பனிமலர் அணிகள் மோதின.

இதில், எஸ்.ஆர்.எம். அணி 22–25, 25–19, 25–15, 25–19 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை வீழ்த்தியது. 

அதேபோன்று, பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் மத்திய இரயில்வே அணியும், கேரளா காவல் அணியும் மோதின.

இதில், தென் மத்திய இரயில்வே அணி25–21, 25–18, 25–22 என்ற நேர்செட்டில் கேரளா காவல் அணியை சாய்த்து வெற்றிப் பெற்றது, 

தமிழ்நாடு யூத் அணியும், தெற்கு இரயில்வே அணியும் மோதிய மற்றொரு ஆட்டத்தில் 25–15, 8–25, 25–16, 25–23 என்ற செட் கணக்கில் தெற்கு இரயில்வேயை வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ்நாடு யூத் அணி.