The third match begins today Will the conquest be successful?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்றுத் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்தியா இதில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா?
கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்றது.
செஞ்சுரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியைத் தழுவியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழந்துவிட்டது ரசிகர்களுக்கு பெரும் வருத்ததை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு அந்நாட்டில் கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் ஆறு முறை அந்த அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்கிறது. ஆனால், ஒரு முறை கூட இந்தியா தொடரைக் கைப்பற்றியதில்லை.
அதேநேரம், அந்த அணியிடம் இந்தியா 'வொயிட் வாஷ்' ஆனதில்லை. ஒரு ஆட்டத்தையாவது டிரா செய்துவிடும். எனவே, இந்த முறை இந்தியாவை 'வொயிட் வாஷ்' செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.
பரபரப்பாக இருக்கும் இந்த ஆட்டத்தை தவற விட வேண்டாம்.
