The rankings will be searched automatically - the secret of victory is Srikanth ...

நன்றாக விளையாடும் பட்சத்தில் தரவரிசை தானாக தேடி வரும் என்று டென்மார்க் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

அண்மையில் டென்மார்க் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த் கடந்த இரண்டு மாதங்களில் மொத்தமாக நான்கு பட்டங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாதில் நேற்று டென்மார்க் ஓபனில் பட்டம் வென்றதற்கு இவருக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

அதில் அவர் கூறியது: “பாட்மிண்டன் விளையாட்டில் நீண்ட காலமாக மலேசியாவின் லீ சாங், சீனாவின் லின் டான் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது பாட்மிண்டன் களம் விரிவடைந்துள்ளது. நான், விக்டர் அக்ஸெல்சன் போன்ற இந்திய வீரர்களும் போட்டிகளை வெல்கின்றோம்.

ஒரு விளையாட்டில் பல்வேறு சாம்பியன்கள் இருப்பது அந்த விளையாட்டுக்கு ஆரோக்கியமானது ஆகும்.

இன்றைய சூழ்நிலையில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். தங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது, எந்தவொரு பலம் வாய்ந்த வீரரையும் வீழ்த்துகிறார்கள். எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடுவது முக்கியம் ஆகும்.

என்னைப் பொருத்த வரையில், தரவரிசையில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 8-10 மாதங்களில் சிறப்பாக விளையாடி வந்துள்ளேன். ஆட்டத்தை அனுபவித்து விளையாடுவதில் மட்டுமே எனக்கு ஆர்வம் உள்ளது.

நன்றாக விளையாடும் பட்சத்தில் தரவரிசை என்னைத் தேடி வரும். நான் அதைத் தேடிச் செல்ல விரும்பவில்லை” என்று ஸ்ரீகாந்த் கூறி பாராட்டுகளை பெற்றார்.