The first time in the semi-finals of the French Open

பிரெஞ்ச் ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மடிசன் கீய்ஸ் முதன்முதலாக தகுதி பெற்றுள்ளார்.

ரோலன்ட் காரோஸ் மைதானங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் நடந்து வருகிறது. தற்போது காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மடிசன் கீய்ஸும், கஜகஸ்தானின் புலின்ட்சேவாவும் மோதினர். 

இதில் மடிசன் கீய்ஸ் 7-6, 6-4 என நேர்செட்களில் புலின்ட்சேவாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இது மடிசன் கீய்ஸ் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும். 

அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவும் - ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர். 

இதில் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் தீம் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.