The famous golf player Tiger Woods arrested
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஃபுளோரிடாவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஃபுளோரிடா காவல்துறையினர் கூறியது:
“முன்னாள் முதல் நிலை வீரரான டைகர் உட்ஸ், வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக தனது காரை நிறுத்தியிருக்கிறார். அவருடைய கார் ஓடிக் கொண்டிருந்தபோதே பிரேக் விளக்கை எரியவிட்டதோடு, 'ஸ்டியரிங்'கில் தூங்கியிருக்கிறார்.
இதனையடுத்து அவரை அதிகாலை மூன்று மணிக்கு கைது செய்தோம். அவருக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அவர் குழப்பமான மனநிலையில் இருந்தார். அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்பதை அறிவதற்காக இரு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அவர் காலை 10.50 மணிக்கு விடுவிக்கப்பட்டார்” என காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டைகர் உட்ஸோ, காவலாளர்களின் குற்றச்சாட்டை மறுத்து கூறியது: 'நான் குடிபோதையில் இல்லை. உடல் நலக்குறைவுக்காக நான் எடுத்துக் கொண்ட மருந்து என்னை இந்த அளவுக்கு பாதித்துவிட்டது. எனது செயலின் தீவிரத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கு நானே முழுப்பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
