The Endiesta decision to leave Barcelona for 22 years has left ...

புகழ்பெற்ற கால்பந்து வீரரான ஆன்ட்ரெஸ் இனியஸ்டா தான் 22 ஆண்டுகளாக விளையாடி வந்த பார்சிலோனா அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.

ஆன்ட்ரெஸ் இனியஸ்டா தனது 12-வது வயதில் பார்சிலோனா அணியில் இணைந்தார்.

பின்னர், அதன் நட்சத்திர வீரர்களில் ஒருவராக மாறி பல்வேறு வெற்றிகளை பெற உதவினார். 

நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 8 லா லிகா பட்டங்களையும், உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியிலும் இனியஸ்டா இடம் பெற்றிருந்தார்.

தற்போது 33 வயதான ஆன்ட்ரெஸ் இனியஸ்டா தொ டர்ந்து தன்னால் பார்சிலானோ அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடியாது.

சீனாவில் உள்ள கிளப்பில் இணைந்து தொடர்ந்த கால்பந்து விளையாட்டை தொடருவேன்.

எனினும், பார்சிலோனா அணிக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.