Thailand Open Grand Prix Gold Patmundan Saina Sai Progress
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஜப்பானின் ஹருகோ சுஸுகி மோதினர்.
இதில் 21-15, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் சுஸுகியைத் தோற்கடித்தார் சாய்னா.
சாய்னா தனது அரையிறுதியில் தாய்லாந்தின் புஸானன் ஆங்பம்ருங்பானுடன் மோதுகிறார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சாய் பிரணீத், தாய்லாந்தின் கன்டப்பான் வாங்சரோன் மோதியதில் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் வாங்சரோனை தோற்கடித்தார் சாய் பிரனீத்.
சாய் பிரணீத் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் பன்னாவிட் தோங்நுயாமுடன் மோதுகிறார்,
