Team won last time this time losing the first clash worn
ஐபிஎல் போட்டியில், போன முறை சாம்பியன் வென்ற சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியும், இறுதிச் சுற்றில் விளையாடி தோல்வியுற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே மோதுகின்றன.
கோலி, டிவில்லியர்ஸ், கே.எல்.ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இவர்கள் அனைவரும் பெங்களூர் அணியில் இருக்கின்றனர். இது அந்த அணிக்கு பின்னடைவாகலாம், ஆனால், கோலி இல்லாமல் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது போல இந்த முறையும் அசத்தும் என்றும் நம்பப்படுகிறது.
அதேநேரத்தில் ஐதராபாத் அணி டேவிட் வார்னர், யுவராஜ் சிங், ஷிகர் தவன், மோசஸ் ஹென்ரிக்ஸ் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களோடு களம் புகுகிறது.
முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் பலத்தை காட்ட நிரூபிப்பார்கள். ஆனால், வெற்றி என்னமோ ஒருவருக்கே.
